News

என்னை இனி தல என்று அழைக்க வேண்டாம் அஜித்குமார் வேண்டுகோள் !

Published

on

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் நடிகர் அஜித் குமார். இவரை ரசிகர்கள் செல்லமாக தல என்று அழைப்பார்கள். இவரின் நடிப்பில் பொங்கள் திருநாளில் திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கியுள்ளார்.

அஜித்குமாரை செல்லமாக தல என்று அழைப்பார்கள். அஜித் படம் வெளியானால் போதும் தல என்ற சொல்லை உலகமெங்கும் டிரெண்ட் செய்வார்கள் ரசிகர்கள். ஆனால் தற்போது ரசிகர்களுக்கும் ஊடகத்திற்கும் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அஜித் குமார் அதில்.

மதிப்பிற்குரிய ஊடகங்கள், பொதுமக்கள் மற்றும் ரசிகர்களுக்கு.. என்னை பற்றி ஏதாவது எழுதும்போது எனது பெயரை அஜித், அஜித்குமார் அல்லது ஏ.கே என்று குறிப்பிடுங்கள். எனது பெயர் முன்னால் “தல” போன்ற வார்த்தைகளை சேர்க்க வேண்டாம். உங்கள் அனைவரது வாழ்விலும் ஆரோக்கியமும், மகிழ்ச்சியும், மன அமைதியும் நிலவட்டும்” என தெரிவித்துள்ளார்.

Trending

Exit mobile version