News
தல 61 படத்தின் அப்டேட் கொண்டாட்டத்தில் அஜித் ரசிகர்கள் !

தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் திரைப்படம் வலிமை.
இப்படத்தின் பின்னணி வேலைகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இரண்டு வாரங்களுக்கு முன்னர்தான் வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் வெளியாக சாதனை படைத்தது.
இந்நிலையில் அஜித்தின் அடுத்த படமான தல 61 பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படத்தை தொடர்ந்து அஜித்தின் போனீகபூர், எச்.வினோத் ஆகியோர் மீண்டும் மூன்றாவது முறையாக இணையவுள்ளனர்.
இந்த தகவல்தான் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகிறது. இந்த அப்டேட்டை அஜித் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.