News
அடுத்த வார படப்பிடிப்புக்கு தயாராகும் அஜித் குமார் !

இயக்குநர் எச்.வினோத்தின் நேர்கொண்ட பார்வை மற்றும் வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இணையவுள்ளார் அஜித் குமார்.
இப்படம் அஜித் குமாருக்கு 61-வது படமாகும். அதிரடி திகில் கதையம்சம் கொண்ட படமாக இது உருவாகவுள்ளது. இப்படத்தில் அஜித்குமார் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதில் ஒரு வேடம் வில்லத்தனமான கதாப்பாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜித் இப்படத்தின் படப்பிடிப்புக்காக தற்போது தயாராகியுள்ளார்.
அடுத்த வாரம் ஜதராபாத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கருப்பதாகவும் படப்பிடிப்பில் அஜித்குமார் கலந்துகொள்வார் என்றும் கூறப்படுகிறது. சமீபத்தில் அஜித்குமார் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை எடுதுக்கொண்டு சென்னை திரும்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.