Connect with us
 

News

அடுத்த படத்துக்கு தயாராகும் அஜித் குமார் !

Published

on

அஜித்குமாரின் வலிமை படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது. ஒரு பைக் துரத்தல் சண்டை காட்சி மட்டுமே மீதம் உள்ளது. அதை ரஷ்யாவில் படமாக்கவுள்ளனர். ஓரிரு வாரங்களில் முழு படத்தையும் முடித்து அடுத்த பாதம் தொடக்கத்தில் இருந்து டப்பிங் கிராபிக்ஸ் இசை கோர்ப்பு போன்ற தொழிநுட்ப பணிகளை தொடங்குகிறார்கள். இப்படத்தில் அஜித்துக்கு கோடியாக கியூமா குரோஷி நடிக்கிறார். இயக்குநர் எச்.வினோத் இயக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த நிலையில் அஜித் அடுத்த புதிய படத்தில் நடிக்க தயாராவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பை அக்டோபர் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர் என்றும் புதுச்சேரி ஜதரபாத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை நடத்தவுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

இது அஜித்துக்கு 61-வது படம். இந்த படத்தையும் வினோத் இயக்கவிருப்பதாகவும் போனிகபூர் தயாரிக்கவுள்ளதாகவும் சமூக வலைத்தளத்தில் தகவல் பரவுகிறது. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களுக்கு பின்னர் அஜித் , வினோத் மற்றும் போனிகபூர் புதிய படத்தில் இணைகின்றனர்.