News
சுற்றுலா செல்லும் அஜித் குமார் இந்த முறை தாஜ்மகால் !
நடிகர் அஜித் குமார் தனக்கு ஓய்வு கிடைக்கும்போது பைக்கில் பயணம் செய்வதை வழக்கமாக கொண்டவர். சில மாதங்களுக்கு முன்பு சிக்கிம் வரை பல ஆயிரம் கிலோ மீட்டர் பைக்கில் சென்று வந்தார். சமீபத்தில் வலிமை படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக ரஷ்யா சென்றபோது அங்கும் பைக்கில் பயணம் செய்து சுற்றுலா தலங்கள் மற்றும் வரலாற்று மிக்கியத்துவம் வாய்ந்த இடங்களை சுற்றிப் பார்த்தார்.
இந்த நிலையில் அஜித்குமார் தற்போது தாஜ்ம்காலுக்கு சென்று சுற்றிப்பார்த்துள்ளார். தாஜ்மகால் முன்பு உள்ள இருக்கையில் அமர்ந்து புகைப்படமும் எடுத்தாத். தாஜ்மகாலில் அஜித்க்குமாரை பார்த்த பலரும் அவருடன் செல்பி எடுத்துக்கொள்ள சூழ்ந்தனர். இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகிறது.
அஜித்தின் வலிமை படம் வரும் தீபாவாளி திருநாளில் திரைக்கு வரும் என்று கூறப்பட்டு வருகிறது. தற்போது அதே நாளில் ரஜினியின் அண்ணாத்த படமும் வெளியாவதால் போட்டிய தவிர்க்க டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் பண்டிகையில் ரிலீஸ் செய்ய படக்குழுவினர் ஆலோசிக்கின்றனர். வலிமை படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் மீண்டும் ஒரு படத்தில் அஜித் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதற்காக அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.