News

ஏகே 61 படத்திற்காக உடல் எடையை குறைக்கும் அஜித் !

Published

on

வலிமை திரைப்படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் மீண்டும் இணையும் ஏகே 61 படத்தை மீண்டும் போனி கபூர் தயாரிக்கிறார்.

வலிமை படத்தில் எச்.வினோத்துக்கும் யுவன் சங்கர் ராஜாவுக்கும் ஏற்பட்ட மனக் கசப்பால் இப்படத்திற்கு வேறு இசையமைப்பாளர் இசையமைக்கவிருக்கிறார்.

இன்னும் சில வாரங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்படத்திற்காக அஜித் குமார் சுமார் 35 கிலோ வரை எடையை குறைக்கவிருக்கிறாராம் என்று கூறப்படுகிறது.

தற்போதுவரை சுமார் 10 கிலோ வரை எடையை குறைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித்துடன் இப்படத்தில் நடிகர் கவின் முக்கிய வேடத்தில் நடிக்கவிருக்கிறாரம்.

இந்த படம் இயக்குநர் எச்.வினோத் பட பாணியில் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் விதமாக உருவாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version