News
புதிய படத்துக்காக உடல் எடையை குறைத்த அஜித் குமார் !

வலிமை படத்துக்கு பின்னர் எச்.வினோத் அஜித் குமார் மீண்டும் இணைந்துள்ள புதிய திரைப்படத்தின் பல்வேறு தகவல்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.இப்படத்தில் அஜித் குமார் இரட்டை வேடங்களில் நடிப்பதாகவும் அதில் ஒன்று வில்லன் கதாப்பாத்திரம் இன்னொன்று பேராசியர் வேடம் என்றும் கூறப்படுகிறது.
அஜித்தின் 61-வது படமான இது வங்கு கொள்ளையை மையமாக வைத்து உருவாகயுள்ளது என்று கூறப்படும் நிலையில் இப்படத்துக்காக அஜித் 25 கிலோ எடையை குறைக்க உள்ளாராம். அதற்காக தற்போது கடும் உடற்பயிற்சிகள் ஈடுபட்டுள்ளாதாகவும் தற்போது வரை 10 கிலோ எடை வரை குறைத்து விட்டதாகவும் அப்படி எடை குறைத்துள்ள அஜித்தின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இப்படத்தின் படப்பிடி ஜதராபத்தில் சென்னை அண்ணா சாலையை அரங்காக அமைத்து படப்பிடிப்பை நடத்துகிறார்கள். இந்த படத்தை முடித்த பின்னர் விக்னேஷ் இயக்கும் அஜித் குமாரின் 62-வது படத்தில் நடிக்கவுள்ளாராம்.