News
இணையத்தை கலக்கும் அஜித்தின் மகன் பிறந்த நாள் கொண்டாட்டம் !

கடந்த வாரம் அஜித் குமார் நடிப்பில் வெளியான திரைப்படம் வலிமை மோஷமான விமர்சனங்கள் வந்தாலும் வசூல் நல்ல படியாகத்தான் வருகிறது என்று கூறுகிறார்கள். இப்படத்தை அடுத்து வலிமை பட கூட்டணியுடன் மூன்றாவது படத்தில் நடிக்கவுள்ளார் அஜித் குமார் இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஜதராபாத்தில் ஆரம்பிக்கவுள்ளது.
இந்த நிலையில் அஜித் குமாரின் மகன் ஆத்விக்கிற்கு நேற்று பிறந்த நாள். இந்த பிறந்த நாளை அஜித்தின் குடும்பத்தினர் கொண்டாடினர். ஒரு ஹோட்டலில் இந்த நிகழ்வு நடந்துள்ளது. அங்கு மனைவி ஷாலினி மகள் அனோஷ்க மகன் ஆத்விக் ஆகியோருடன் அஜித் குமார் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தில் அஜித் குமார் அடுத்த படத்தின் கெட்டப்புடன் செம ஸ்டைலாக உள்ளார்.