News

அஜித் குமார் நடிக்கும் வலிமை படத்தின் வெளியீடு தள்ளி வைப்பு !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் நடிக்கும் வலிமை படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிவடைந்து விட்ட நிலையில் கிளைமாஸ் சண்டைக்காட்சி மட்டுமே எடுக்கவுள்ளது.

இந்த சண்டைக்காட்சியை வெளிநாட்டில் எடுக்க இருந்தனர் படக்குழு. ஆனால் கொரோனா இரண்டாம் அலை காரணமாக அந்த திட்டத்தை கைவ்விட்டுவிட்டு தற்போது அந்த சண்டைக்காட்சியை இங்கவே செட் போட்டு எடுக்கலாம்ன்னு இருக்கிறதாம் படக்குழு.

ஆனால் அதுவும் இப்போது கொரோனாவால் ஊரடங்கு காரணமாக எடுக்க முடியாமல் உள்ளது படக்குழு. இப்படத்தின் எந்தவோரு அப்டேட்டும் தயாரிப்பு நிறுவனம் கொடுக்காத காரணத்தால் ரசிகர்கள் எந்த அளவுக்கு தொல்லை கொடுக்கிறார்கள் என்பது நாம் அறிந்த ஒன்றே.

இந்நிலையில் இப்படம் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருந்தது. தற்போது உள்ள சூழலில் படத்தின் படப்பிடிப்பே முடியாத நிலையில் இப்படத்தின் வெளியீடு தீபாவளி திருநாளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

Trending

Exit mobile version