News

மீண்டும் கல்லூரி பேராசிரியராக நடிக்கும் அஜித் குமார்?

Published

on

வலிமை படத்தை தொடர்ந்து மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் அடுத்த படத்தில் நடிக்கவுள்ளார்.

இப்படம் அஜித்துக்கு 61-வது திரைப்படம். அதிரடி திகில் கதையம்சம் கொண்ட திரைப்படமாக உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் அஜித் இரட்டை வேடத்தில் நடிக்கவுள்ளார் என்ற ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இதில் ஒரு வேடம் வில்லன் கதாபாத்திரம் என்றும் கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த வாரம் ஜதராபாத்தில் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது. படப்பிடிப்புல் அஜித்குமார் கலந்துகொள்ள இருக்கிறார்.

நீண்ட தாடியுடன் அஜித்குமார் இருக்கும் பல புகைப்படங்கள் இணையதளத்தில் பரவி வருகிறது. இந்த தோற்றம் படத்தின் ஒரு முக்கியமான தோற்றம் என்று கூறப்படுகிறது. இரண்டு வேடங்களில் ஒரு வேடம் அஜித் குமார் கல்லூரி பேராசிரியர் வேடத்தில் நடிக்கவிருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது.

இருந்தாலும் இந்த தகவலை படக்குழு இன்னும் உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version