News

மீண்டும் வில்லன் வேடத்தில் நடிக்கும் அஜித் குமார் !

Published

on

அஜித்குமார் நடித்துள்ள வலிமை படம் பொங்கள் பண்டிகையெட்டி வருகிற 13-ம்தேதி திரைக்கு வரும் என்று அறிவித்த நிலையில் கொரோனா 3-வது அலை பரவல் இரவு ஊரடங்கு போன்ற காரணங்களால் வெளியீட்டு தேதியை தள்ளி வைத்துள்ளனர்.

கொரோனா பரவல் அடங்கிய பிறகு புதிய ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். இந்த நிலையில் அடுத்த புதிய படத்தின் நடிக்க அஜித் தயாராகி வருகிறார். இது அவருக்கு பிறகு 61-வது படம்.

இந்த படத்தையும் நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களை தொடர்ந்து மூன்றாவது முறையாக இயக்குநர் எச்.வினோத் இயக்க போனி கபூரே இப்படத்தை தயாரிக்கிறார். திரைக்கதை எழுதும் பணிகள் முடிந்துள்ளது.

அதிரடி திகில் கதையம்சத்தில் இந்த படம் தயாராக இருப்பதாகவும் இதில் அஜித்குமார் வில்லத்தனமான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்கவுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே வாலி, பில்லா, வரலாறு, மங்காத்தா படங்களில் அஜித் வில்லனாக நடித்துள்ளார். அந்த படங்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் மிகப்பெரிய வெற்றியையும் பெற்று கொடுத்தது.

Trending

Exit mobile version