Connect with us
 

News

ஐதராபாத்தில் மீண்டும் தொடங்கும் வலிமை படப்பிடிப்பு !

Published

on

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் மற்றும் ஹூமா குரேசி நடிக்கும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் நீண்ட மாசமாக காத்திருக்கிறார்கள்.

மே மாதம் 1-ம் தேதி அஜித் பிறந்த நாளென்று பர்ஸ்ட் லுக் வெளியாகவிருந்தது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக அதுவும் தள்ளி போனது. அதன் பின்னர் இரண்டு மாதங்களாகியும் இன்று வரை பர்ஸ்ட் லுக் வெளியாகவில்லை.

இதனிடையே படத்தின் விடுபட்ட காட்சிகளை ஐதராபாத்தில் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கவுள்ளதாம் படக்குழு. சில நாட்கள் மட்டும் அங்கு படப்பிடிப்பை நடித்த போகிறதாம்.அதன் பின்னர் படத்தின் இறுதி சண்டைக்காட்சியை படமாக்கவும் திட்டமிட்டுள்ளுதாம் படக்குழு.

படப்பிடிப்பை முழுவதுமாக நடத்தி முடித்த பின்னர்தான் வலிமை அப்டேட் கொடுக்க வேண்டும் என்று படக்குழு முடிவேடுத்துள்ளது.ஆனாலும் இம்மாதம் 15-ம் தேதி அப்டேட் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகிறார்கள்.