News

வலிமை படத்தின் டீஸர் தேதி மற்றும் வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடித்து வரும் திரைப்படம் வலிமை. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். கடந்த இரண்டு ஆண்டுகளாக வலிமை படத்தின் வலிமை அப்டேட் கேட்டு காத்திருந்தனர் ரசிகர்கள். யாருமே எதிர்பாராதா நேரத்தில் வலிமை ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இப்படத்திற்கு இன்னும் 10 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே மீதமுள்ளது, இதை முடித்து விட்டு பின்னர் மற்ற பணிகளை தொடங்கவுள்ளதாகவும் தற்போது வலிமை படத்தின் டப்பிங் பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழிலும் ஹிந்தியிலும் ஒரே நேரத்தில் வெளியாகிறது.

இந்த நிலையில் வலிமை படத்தின் டீசர் ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தின் போது வெளியாகும் என்று தெரிகிறது, அதேபோல் ரீலீஸ் தேதியும் தீபாவளிக்கு இல்லாமல் ஆயுத பூஜைக்கு வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.

Trending

Exit mobile version