News

டைம்ஸ் சதுக்கத்தில் அஜித் குமாரின் துணிவு !

Published

on

இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து ஜனவரி 11ம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த நிலையில் இப்படத்தின் புரோமோஷன் நிகழ்வு அமெரிக்க – நியூயார்க் நகரில் உள்ள உலக புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கத்தில் உள்ள நாஸ்டாக் கட்டிடத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல் முறையாக இந்திய திரைப்படம் ஒன்று டைம்ஸ் சதுக்கத்தில் விளப்பரப்படுத்தப்படவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. துணிவு படத்தின் வீடியோ காட்சிகள் நாஸ்டாக் கட்டிடத்தில் திரையிடப்படும் என்றும் அப்போது செல்பி எடுத்து அனுப்பும் நபர்களை தேர்வுசெய்து அவர்களுக்கு துணிவு படத்தின் இலவச டிக்கெட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Trending

Exit mobile version