Connect with us
 

News

வெளியானது துணிவு படத்தின் மூன்றாவது பாடல் !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடித்து பொங்களுக்கு வெளியாகயிருக்கும் துணிவு படத்தின் மூன்றாவது பாடல் தற்போது வெளியாகியுள்ளது.

பஞ்சாபில் நடைபெற்ற வங்கி கொள்ளையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். அஜித்துக்கு ஜோடியாக மஞ்சு வாரியார் நடித்துள்ளார்.

இரண்டு பாடல்கள் வெளியான நிலையில் இன்று இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகியுள்ளது. கேங்ஸ்டா என ஆரம்பிக்கும் இப்பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அஜித் குமாரின் ரசிகர்கள் கொண்டாடும் விதமாகவும் தன்னை எதிரியாக நினைக்கும் அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் விதமாகவும் அமைந்துள்ளது இப்பாடலின் வரிகள்.