News

அதிரடி ஆக்சன் காட்சிகள் நிறைந்த துணிவு டிரைலர் வெளியானது !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் குமார் நடிப்பில் பொங்கள் பண்டிகைக்கு வெளியாகவுள்ள திரைப்படம் துணிவு.

அஜித்துடன் இப்படத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, பலர் நடித்துள்ளனர். முதல் முறையாக இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்.

துணிவு படத்தின் டிரைலர் இன்று இரவு 7 மணிக்கு வெளியாகு என படக்குழு நேற்று அறிவித்திருந்த நிலையில் காலை முதலே அஜித் ரசிகர்கள் அதை கொண்டாட ஆரம்பித்து விட்டனர். படக்குழுவும் படத்தில் நடிக்கும் கதாப்பாத்திரங்களை ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகப்படுத்தி வந்தது.

ஆனால் அஜித்தின் பெயரை மட்டும் குறிப்பிடாமல் டிரைலரில் பார்க்கவும் என்று குறிப்பிட்டிருந்த படக்குழு அதன் படி தற்போது துணிவு படத்தின் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த மாஸான டிரைலர் வெளியாகியுள்ளது.

Trending

Exit mobile version