News

மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித் குமாரின் வலிமை !

Published

on

வினோத் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் நடிக்கும் திரைப்படம் வலிமை வரும் பொங்கள் பண்டிகைக்கு திரைக்கு வரவுள்ளது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. தெலுங்கில் வலிமை படத்திற்கு பலம் என்று பெயர் வைத்துள்ளனர்.

இப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயா நடிக்கிறார். இதனால்தான் இப்படத்தை தெலுங்கிலும் வெளியிடுகின்றனர். இதனால் அங்குள்ள ரசிகர்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு கிடைக்கும் என்கிறார்கள்.

அஜித் நடித்த சில படங்கள் ஹிந்தியில் டப்பிங் செய்து அங்கு யூடியூபில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஹிந்தியிலும் அஜித்துக்கு ஓரளவு ரசிகர்கள் உள்ளனர். மேலும் இப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் பாலிவுட்டை சேர்ந்தவர் என்பதால் ஹிந்தியிலும் அவரால் இப்படத்தை வெளியிடமுடியும். இவை அனைத்துற்குமான அதிகாரபூர்வ அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.

Trending

Exit mobile version