News

அஜித்குமாரின் வலிமை திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிப்பு !

Published

on

எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடித்திருக்கும் திரைப்படம் வலிமை. படத்தின் அனைத்து படப்பிடிப்பு பணிகளும் முடிவடைந்து தற்போது தொழிநுட்ப பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் அப்டேட் கேட்டு அஜித் ரசிகர்கள் அரசியல் தலைவர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை போர்கொடி தூக்கி வந்த நிலையில் அஜித் தன் ரசிகர்களுக்கு அறிவுரை சொல்லி கோரிக்கை வைத்ததன் மூலம் அவை அனைத்தும் நிறுத்தப்பட்டது.

வலிமை திரைப்படம் தீபாவளி பண்டிகையில் ரஜினியின் அண்ணாத்த படத்துடன் வெளியாகும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்தான் வலிமை திரைப்படம் தீபாவளி வெளியீட்டிலிருந்து பின்வாங்கியது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் தமிழர் பண்டிகை பொங்கள் திருநாளையொட்டி வலிமை திரைப்படம் வெளியாகும் என்று வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்திருந்தார். இருந்த போதிலும் தேதியை அவர் அறிவிக்கவே இல்லை.

இந்தநிலையில்தான் வலிமை படத்தை பொங்கள் பண்டிகைக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாக திரைக்கு கொண்டுவர படக்குழுவினர் தற்போது திட்டமிட்டுள்ளதாகவும் இம்மாதம் இல்லை அடுத்த மாத இறுதியில் படத்தின் வெளியீட்டு தேதியை படக்குழுவினர் அறிவிக்கவுள்ளரனர்.

வலிமை படத்தை அடுத்த மாதம் முதல் வாரத்தில் தணிக்கை குழுவினருக்கு அனுப்புகிறது படக்குழு. வலிமை படத்தில் துப்பறியும் அதிரடி போலீஸ் அதிகாரியாக அஜித் குமார் நடித்துள்ளார். இப்படத்தில் காலா படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த பாலிவுட் நடிகை கியூமா குரேஷி நாயகியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending

Exit mobile version