News

அஜித் குமார் நடிக்கும் விடாமுயற்சி திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !

Published

on

இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார் தற்போது நடித்து வரும் திரைப்படம் விடாமுயற்சி ஃபர்ஸ்ட் லுக்கை தயாரிப்பு நிறுவனமான லைகா வெளியிட்டுள்ளது.

துணிவு படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின்னர் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில் அனிருத் இசையில் இப்படம் உருவாகி வருகிறது. அஜித் குமார் ஜோடியாக த்ரிஷா நடிக்க இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ் பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு தற்போது துபாயில் உள்ள அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் யாரும் எதிர்பார்க்காத நிலையில் இன்று விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதில் அஜித் குமார் ஆள் நடமாட்டமே இல்லாத ஒரு நெடுஞ்சாலையில் கையில் ஒரு டிராவல்ஸ் பேக் உடன் நடந்து வரும் புகைப்படம் உள்ளது.

இது பற்றி ைகா புரொடக்‌ஷன்ஸ் தலைவர் ஜி.கே.எம். தமிழ் குமரன் கூறும்போது, ​​“எங்கள் சிறப்பு தயாரிப்புகளில் ஒன்றான ‘விடாமுயற்சி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இந்தப் படத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது முதல் ரசிகர்கள் இந்த படத்தின் மீது தங்கள் அன்பையும் ஆதரவையும் பெருமளவில் வெளிப்படுத்தி வருகின்றனர். அவர்களை மகிழ்விக்கும் விதமாக முதல் பார்வை போஸ்டரை வெளியிட்டிருக்கிறோம். படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. ஆகஸ்ட் நடுப்பகுதியில் படப்பிடிப்பு முடிவடையும். ரிலீஸ் தேதியை விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்” என்றார்.

 

 

Trending

Exit mobile version