Connect with us
 

News

அஜர்பைஜானில் ஆரம்பமாகும் அஜித் குமாரின் விடாமுயற்சி படப்பிடிப்பு !

Published

on

அஜித் குமார் நடிப்பில் உருவாகவுள்ள விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அஜார்பைஜானில் நாளை முதல் தொடங்கவுள்ளது.

துணிவு படத்துக்கு பின்னர் லைக்கா நிறுவனம் தயாரிக்கும் படத்தில் அஜித் நடிக்க ஒப்பந்தமானார். இந்த படத்தை முதலில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்த நிலையில் கதை விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடில் விக்னேஷ் சிவனை அதிரடியாக நீக்கியது தயாரிப்பு நிறுவனம்.

இதனை தொடர்ந்து இயக்குநர் மகிழ் திருமேனி ஒப்பதமானார். இதற்கான திரைக்கதை அமைக்கும் பணியில் மகிழ் திருமேனி கடந்த சில மாதங்களாக தீவிரமாக ஈடுபட்டுவந்தார். முழு ஸ்கிரிப்ட்டும் தயாரான நிலையில் இப்படத்திற்கு விடாமுயற்சி என தலைப்பும் வைக்கப்பட்டது.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இதன் படப்பிடிப்பு துபாயில் தொடங்குவதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் இப்படத்துக்காக அஜித் நேற்று அஜர்பைஜானுக்கு புறப்பட்டு சென்றார். அவரைத் தொடர்ந்து படக்குழுவினரும் அங்கு சென்றுள்ளனர். நாளை முதல் விடாமுயற்சி படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டிலும் பல நகரங்களிலும் நடத்தப்படுகிறது. 40 நாட்கள் அங்கு படப்பிடிப்பை நடத்தி விட்டு நாடு திரும்ப படக்குழு திட்டமிட்டுள்ளதாம்.