News

ஜூன் மாதம் ஆரம்பிக்கும் அஜித் நடிக்கும் விடாமுயற்சி படப்பிடிப்பு !

Published

on

அஜித் நடிக்கவிருந்த அடுத்த படத்தை இயக்கவிருந்தார் இயக்குநர் விக்னேஷ் சிவன். ஆனால் பல்வேறு காரணங்களால் அப்படலிருந்து விக்னேஷ் சிவன் அதிரடியாக நீக்கப்பட்டார். அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த படத்தை இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கவுள்ளார் என்றும் அப்படத்திற்கு விடாமுயற்சி என்றும் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைகா அதிகாரபூர்வமாக அறிவித்தது. இப்படத்தில் நடிக்கும் நடிகர் நடிகைகளில் பெயர்கள் இன்னுமே படக்குழு அறிவிக்காமல் இருக்கிறது.

இப்படத்தில் அஜித் ஜோடியாக கங்கனா ரணாவத், கத்ரினா கைப், கரீனா கபூர் ஆகியோரிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக முன்னதாக தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் நாயகியாக த்ரிஷா நடிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனம் மிக விரைவில் அறிவிக்கவுள்ளதாம்.

விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இப்படத்திற்கான லோகேஷன் மற்றும் நடிகர்கள் தேர்வு அண்டைபெற்று வருகிறதாம்

Trending

Exit mobile version