News
வலிமை படம் பற்றி பேசியுள்ளா அஜித்தின் சகோதரர் !
இயக்குநர் எச் வினோத் இயக்கத்தில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அஜித் குமார் நடித்து நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘வலிமை’
அஜித் நடிப்பில் இரண்டு அரை ஆண்டுகளுக்கு பின்னர் வெளிவரும் திரைப்படம் என்பதால் ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்க காரணம். கடைசியாக அஜித்தின் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘நேர்கொண்ட பார்வை’
இந்தநிலையில் அஜித்தின் சகோதரரான அனில் குமார் தன்னுடைய சமூகவலைதளப் பக்கத்தில் ‘வலிமை’ பற்றி தன்னிடம் கேட்கப்படும் கேள்விகளுக்கு கருத்து தெரிவித்துள்ளார்.
அதில் இத்தனை நாட்களாக என்னிடம் ஆர்வமாகக் கேட்கப்பட்ட ‘வலிமை’ அப்டேட்களால் நான் மிகவும் எரிச்சலைந்தேன். நான் ஒன்றை இப்போது ஒத்துக்கொள்ள வேண்டும். நான் என்னுடைய வாழ்க்கையில் பாதியை வாழ்ந்துவிட்டேன் ஆனால் உங்களைப் போலவே அதே ஆர்வத்தோடு முதல் நாள் முதல் காட்சியைப் பார்க்க ஆவலாக உள்ளேன் எனக் கூறியுள்ளார்.