News
லியோ சாதனையை முறியடித்த அஜித்தின் குட் பேட் அக்லி !

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் குமார் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி வருகிற ஏப்ரல் 10-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் இரண்டு தினங்களுக்கு முன்னதாக வெளியானது. வெளியாகி இரண்டு நாட்களில் அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்து வருகிறது.
ட்ரைலர் வெளியாகி 24 மணி நேரத்தில் 3.2 கோடி பார்வைகளாளர்களை கடந்துள்ளது. ஒரே நாளில் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது. தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ திரைப்படத்தின் ட்ரைலர் 24 மணி நேரத்தில் 3.10 கோடி பார்வையாளர்களை கடந்ததே இது வரையில் சாதனையாக இருந்து வந்த நிலையில் அந்த சாதனை முறியடித்துள்ளது அஜித் குமாரின் குட் பேட் அக்லி.