News
ஒரே இடத்தில் வலிமை மற்றும் பீஸ்ட் படப்பிடிப்பு !

தல அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்ட நிலையில் இன்னும் 5 நாட்கள் படப்பிடிப்பு மட்டுமே பாக்கி இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு விரைவில் ரஷ்யாவில் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக வலிமை படக்குழுவினர் செப்டம்பர் மாதத்தில் ரஷ்யா செல்ல இருப்பதாகவும் அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது.
இந்த நிலையில் தளபதி விஜய் நடித்து வரும் ’பீஸ்ட்’ படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு நேற்று சென்னையில் தொடங்கியது. சென்னை பின்னி மில்லில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு படக்குழுவினர்கள் ரஷ்யா செல்ல உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரஷ்யாவில் ’பீஸ்ட்’ படக்குழுவினர் ஒரு அதிரடி ஆக்ஷன் காட்சிகளை படமாக்க திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில் அஜித்தின் ‘வலிமை’ மற்றும் விஜய்யின் ’பீஸ்ட்’ ஆகிய இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்புகள் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் ரஷ்யாவில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதுவும் இரண்டு படக்குழுவினர் பார்த்து வைத்துள்ள லொகேஷன்களும் கிட்டத்தட்ட அருகருகே உள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.