News
மூன்று மொழிகளில் வெளியாகும் அஜித்தின் வலிமை !

அஜித்குமார் நடிக்கும் வலிமை படத்தை ஒரே நாளில் தமிழ், இந்தி, தெலுங்கு ஆகிய 3 மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
வலிமை படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்குகிறார். மறைந்த நடிகை ஶ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். இவர்களின் கூட்டணியில் நேர்கொண்ட பார்வை திரைப்படம் வெளியாகியுள்ளது.
தற்போது வலிமை பட வேலைகள் இறுதிக்கட்டத்தில் உள்ளது. சமீபத்தில் வெளிநாடு சென்றும் படப்பிடிப்பை நடத்திவிட்டு திருப்பினர் படக்குழு.
இப்படத்தில் அஜித்குமார் நடிக்கும் தோற்றம் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது. பொங்கள் பண்டிகைக்கு வலிமை திரைப்படம் திரைக்கு வரவுள்ளது.
இந்த நிலையில் வலிமை படத்தை தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளிலும் வெளியிட ஏற்பாடுகள் நடப்பதாகவும் இரண்டு மொழிகளிலும் படத்தை டப்பிங் செய்யும் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.