News

ராட்சசன் இந்தி ரீமேக்கில் விஷ்ணு விஷாலுக்கு பதிலாக அக்‌ஷய் குமார் !

Published

on

விஷ்ணு விஷால் நடிப்பில் 2018-ம் ஆண்டு வெளியான ராட்சசன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு கிடைத்தது. விஷ்ணு விஷால் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படமாக அமைந்தது இந்த ராட்சசன்.

சைக்கோ திரில்லர் படமாக வெளியாகிருந்தது.நாயகியாக அமலா பால் நடித்திருந்தார். ராஜ்குமார் இப்படத்தை இயக்கிருந்தார். தற்போது இப்படத்தை மற்ற மொழிகளில் ரீமேக் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். இப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் பொல்லம் கொண்டா சீனிவாஸ் நடிக்கிறார்.

இந்தியில் விஷ்ணு விஷால் கதாப்பாத்திரத்தில் நடிப்பது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. ஆயுஷ்மான் குரானா பெயர் அடிபட்டது. தற்பொது அக்‌ஷய்குமார் ராட்சசன் ஹிந்தி ரீமேக்கில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரே இப்படத்தை தயாரிக்கவும் உள்ளதாகவும் ரமேஷ் வர்மா என்பவர் இப்படத்தை இயக்கப்போவதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version