News
குழந்தையை வரவேற்க தயாராகும் ஆலியா பட் – ரன்பீர் கபூர் !
![](https://cinetimee.com/wp-content/uploads/2022/06/News-2022-copy-59.jpg)
பாலிவுட் நடிகையான Alia Bhatt பிரபல இயக்குநர் மகேஷ் பட் மற்றும் நடிகை சோனி ரஸ்டான் ஆகியோரின் மகள் ஆவார். பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், பாலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார்.
கரண் ஜோஹர் இயக்கிய ஸ்டூடண்ட் ஆஃப் த இயர் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமான இவர், ஹைவே, 2 ஸ்டேட்ஸ், அம்டி சர்மா கி துல்ஹனியா போன்ற படங்களில் நடித்துள்ளார்.
கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வந்த ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் ஜோடியின் திருமணம் கடந்த ஏப்ரல் மாதம் 14-ந் தேதி மும்பை, பாந்த்ராவில் உள்ள வாஸ்து இல்லத்தில் உறவினர்கள் முன்னிலையில் நடந்தது.
இந்நிலையில்,நடிகை ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். அதில், தலையில் தொப்பி அணிந்தபடி நடிகர் ரன்பீர் கபூர் காணப்படுகிறார். நடிகை ஆலியா பட் அல்டிராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்கிறார். இதனை திரையில் காண்பிக்கும் கணினியில், இதயம் ஒன்றின் எமோஜிக்கான ஐகான் தென்படுகிறது. அதனை பார்த்து ஆலியா புன்னகைக்கிறார்.