News

தளபதி 66 படத்தில் நான் நடிக்கிறேனா – கீர்த்தி சுரேஷ் !

Published

on

மிக குறுகிய காலத்தில் தமிழ் சினிமாவில் அதிக ரசிகர்களை தன் வசம் ஈர்த்தவர் நடிகை கீர்த்தி சுரேஷ். விஜய்யுடன் பைரவா, சர்கார் படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

பீஸ்ட் படத்தில் நடித்து வரும் தளபதி விஜய் இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் தளபதி 66 படத்தில் நடிக்கவுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ஆரம்பிக்கவுள்ளது.

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளிவந்தது. இந்த நிலையில்தான் தெலுங்கு மீடியா ஒன்றுக்கு கீர்த்தி சுரேஷ் அளித்த பேட்டி ஒன்றில் இதே கேள்வி கேட்க பட்டது.

அதற்கு பதில் கூறிய கீர்த்தி சுரேஷ் நான் தளபதி 66 படத்தில் நான் நடிக்கவில்லை. இது பற்று யாரும் என்னை அனுகவும் இல்லை என்று இது நாள் வரைக்கும் வெளிவந்த மீடியாக்களின் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Trending

Exit mobile version