News

அமிதாப் பச்சன் நடித்த நேரடி தமிழ் படம் உயர்ந்த மனிதன் கைவிடப்பட்டது – எஸ்.ஜே.சூர்யா விளக்கம் !

Published

on

இயக்குநராக அறிமுகமாகி தற்போது பிஸியான ஒரு நடிகராக தமிழ் சினிமாவில் வலம் வந்து கொண்டிருக்கிறார் எஸ்.ஜே.சூர்யா.

அவரின் நடிப்பில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘உயர்ந்த மனிதன்’ என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியானது. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாக இருந்தது இயக்குநர் தமிழ்வாணன் இப்படத்தை இயக்கவிருந்தார்.

என்ன காரணமோ தெரியவில்லை ஆரம்பித்து சில நாட்களிலேயே இந்த படத்தின் தயாரிப்பாளுடன் அமிதாப்பச்சனுக்கு ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இப்படத்திலிருந்து விலகினார். வேறு வழியில்லாமல் தொடங்கிய வேகத்திலேயே இப்படம் நிறுத்தப்பட்டது. அண்மையில் இது பற்றி எஸ்.ஜே.சூர்யாவிடம் உயர்ந்த மனிதன் படம் கைவிடப்பட்டதா என கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு அவர் கூறியது ‘ நான் உயர்ந்த மனிதன் படத்தை எடுக்க நிறைய கஷ்டப்பட்டு விட்டேன். அந்த படத்துக்காக இயக்குநருடன் கதை விவாதத்தில் ஈடுபட்டு படப்பிடிப்பை ஆரம்பித்தோம் ஆனால் சில பிரச்சனைகளால் இப்படம் நிறுத்தப்பட்டது.

கடவுள் ஏன் இவ்வளவு கஷ்டத்தை எனக்கு கொடுத்தார் என்று தெரியவில்லை. கண்டிப்பாக உயர்ந்த மனிதன் படத்தை அமிதாப்பச்சன் அவர்களை வைத்து நான் எடுப்பேன் என்று கூறினார்.

 

Trending

Exit mobile version