திண்டுக்கல் அருகில் வசிக்கும் ஜோ மல்லூரிக்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு சரவணன், விக்னேஷ், சினேகன் என நான்கு மகன்கள். சரவணன் மகன் கெளதம் கார்த்திக் மகள் வெண்பா. இரண்டாவது மனைவிக்கு சேரன், செல்லா, சவுந்தரராஜா ஆகியோர் மகன்கள்.
சேரன் தன் அண்ணன் சரவணன் மீது மிகுந்த பாசம் வைத்துள்ளார். வெண்பாவின் குழந்தை தங்கள் வீட்டில்தான் பிறக்கவேண்டும் என்று நினைக்கிறார் சரவணன். அதற்காக தன் சொந்த வீட்டு மனையை சரவணனுக்கு கொடுத்து வீடு கட்டச் சொல்கிறார் சேரன்.
அண்ணன் , தம்பி என அந்த மிகப்பெரிய குடும்பமும் ஒன்றாக வாழ மிகப்பெரிய வீட்டை தன் சொந்த செலவில் கட்ட ஆரம்பிக்கிறார் சரவணன். இந்த அண்ணன் தம்பிகளை பகை காரணமாக பிரிக்க நினைக்கிறார் டேனியல் பாலாஜி. இறுதியில் அந்த வீட்டைக்கட்டினார்களா அண்ணன் தம்பிகள் அனைவரும் ஒரே குடும்பமாக அந்த வீட்டில் வாழந்தார்களா இல்லையா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
படத்தின் நாயகர்களாக வரும் கெளதம் கார்த்திக், சேரன், சரவணன் ஆகிய மூவரையும்தான் சொல்ல வேண்டும். தன் அப்பா சரவணன் பேச்சை தட்டாத மகனாக வலம் வரும் கார்த்திக் கிடைத்த காட்சிகள் அனைத்திலும் பாசத்தால் நம்மை கவர்கிறார்.
சேரனுக்கு ஒரே நேரத்தில் பல்வேறு உணர்ச்சிகளை வெளிப்படுத்தக்ககூடிய கதாப்பாத்திரம். பாசமான அண்ணன் மறுபக்கம் குடும்பத்தை பிரிக்கத் துடிக்கும் தம்பிகள், தகராறு செய்யும் மனைவி, பாசம் காட்டும் அண்ணன் மகன் கெளதம் என கிடைக்கும் இடங்களில் எல்லாம் இவரின் அந்த அனுபவ நடிப்பி தெரிகிறது.
மிகவும் அன்பாக அதிர்ந்து பேசாத ஒரு அண்ணனாக சரவணன். ஒட்டு மொத்த குடும்பத்தையும் தனது ஒற்றை சொல்லால் கட்டிவைக்கிறார்.
இப்பிடி ஒரு அண்ணன் நமக்கு இல்லையே என படம் பார்க்கும் நம்மை நினைக்க வைத்து விட்டார் சரவணன்.
Cinetimee
கெளதம் கார்த்திக்கு ஜோடியாக வரும் ஷிவாத்மிகா ராஜசேகர். பெரிதாக படத்தில் காட்சிகள் இல்லையென்றாலும் கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளார். கண்டிப்பாக அடுத்தடுத்த படங்களில் நடிகர் ராஜசேகர் – ஜீவிதா ஜோடியின் மகள் என்று தமிழ் சினிமாவுக்கு நிரூபித்து காட்டுவார்.
வில்லனாக வரும் டேனியல் பாலாஜி வழக்கமாக தனது வில்லத்தனத்தை காட்டி மிரட்டுகிறார். தம்பியாக வரும் சவுந்தரராஜனுக்கு நடிக்க நல்ல வாய்ப்பு கிடைத்திருக்கிறது இந்த படத்தில். அந்த கதாப்பாதிரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்துள்ளார்.
சித்து குமார் இசையில் பாடல்கள் பெரிதாக ரசிக்க வைக்கவில்லை. இது போன்ற குடும்ப திரைப்படங்களுக்கு கண்டிப்பாக பாடல்கள் மனதை தொடும் விதத்தில் இருக்க வேண்டும்.
ஒரு பாடலையாவது மனதை கவரும் விதமாக கொடுத்திருக்கலாம். பாலபரணியின் ஒளிப்பதிவு கிராமத்து கூட்டுக்குடும்பத்தை மிக அழகாக யதார்த்தமாக பதிவு செய்துள்ளார்.
கண்டிப்பாக இந்த படத்தை நாம் பார்க்கும் போது 2001- ம் வெளியான பாண்டவர் இல்லம் திரைப்படம் நம் நினைவுக்கு வந்து போகும்.