News

பர்ஸ்ட் லுக்கிடன் வெளியீட்டு தேதியை சொன்ன அண்ணாத்த படக்குழு !

Published

on

இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பலர் நடித்துள்ளா படம் அண்ணாத்த. இப்படத்தின் அனைத்து படப்பிடிப்புகளும் முடிவடைந்து பின்னணி வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி இன்று மாலை வெளியாகும் என்று காலையில் ஒரு அறிவிப்பு வெளியானது. அதே போல இன்று மாலை இப்படத்தின் பர்ஸ்ட் லுக்குடன் கூடிய அறிவிப்பு தேதியை அறிவித்தது தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் இந்த அறிவிப்பை ரஜினி ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகிறார்கள்.

தற்போது ரஜினிகாந்த் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இன்னும் இரண்டு அல்லது மூன்று வாரங்களில் வீடு திரும்புவார் என்று கூறப்படுகிறது. இந்தியா வந்ததும் அண்ணாத்த படத்திற்காக டப்பிங்கை ரஜினிகாந்த் முடிக்கவுள்ளாராம்.

Trending

Exit mobile version