News
மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் பாகம் ஒன்று வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இயக்குநர் மணிரத்னம் தனது கனவு படமான எழுத்தாளர் கல்கி எழுதிய புகழ்பெற்ற வரலாற்று நாவலான பொன்னியின் செல்வன் படத்தி இயக்கி வருகிறார்.இப்படத்தில் நடிகர்கள் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, பிரபு, சரத்குமார், ஜெயராம், ரஹ்மான் நடிகைகள் ஐஸ்வர்யா ராய், திரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, என பல முன்னணி நடிகர் நடிகைகள் நடித்து வருகின்றனர்.
படத்தின் திரைக்கதையை மணிரத்னமும் குமரவேலும் இணைந்து உருவாக்கியுள்ளார்கள். வசனம் – ஜெயமோகன் எழுத ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க ஒளிப்பதிவு செய்கிறார் ரவி வர்மன். மணிரத்னம் அவர்களின் மெட்ராஸ் டாக்கீஸும் லைகா நிறுவனமும் இணைந்து இப்படத்தை மிக பிரம்மாண்டமாக தயாரிக்கிறது.
இத்திரைப்படம் பாகுபலி போல இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு தற்போது ஐதராபாத்தில் நிறைவு பகுதியை நெருங்கி விட்ட நிலையில். பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் போஸ்டர் மற்றும் வெளியீட்டு ஆண்டு கூடிய போஸ்டரை வெளியிட்டது படக்குழு. அதன் பொன்னின் செல்வன் முதல் பாகம் அடுத்த வருடம் கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளதாம்.