News
ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை வெளியீட்டு தேதி அறிவிப்பு !

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடித்துள்ள திரைப்படம் சார்பட்டா பரம்பரை. வடசென்னை பகுதியில் வாழும் மக்களின் வாழ்க்கையில் மிக முக்கியமான விளையாட்டுகளில் ஒன்று குத்துச்சண்டை. இந்த விளையாட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள திரைப்படம்தான் இந்த சார்பட்டா பரம்பரை.
இப்படத்தில் ஆர்யாவுடன் பசுபதி, ஜான் கோகேன், கலையரசன், சந்தோஷ் பிரதாப், சபீர், துஷாரா, ஆகியோர் படத்தின் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். சதோஷ் நாரயணன் இசையத்திருக்கும் இப்படத்தின் அனைத்து பணிகளும் நடைபெற்று முடிந்து விட்டது.
இந்நிலையில் இப்படம் ஜூலை 22-ம் தேதி அமேஷான் ஓடிடி தளத்தில் நேடியாக வெளியாகவிருக்கிறது என்று படக்குழு இன்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.