News

அனுஷ்கா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது !

Published

on

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் அனுஷ்கா தமிழில் கடைசியாக நடித்த நேரடி திரைப்படம் சிங்கம் 3. அதன் பின்னர் பாகுபலி, பாகமதி, சைலண்ட் படங்கள் தெலுங்கில் தயாராகி தமிழிலும் வெளியிடப்பட்டன.

அதன் பின்னர் உடல் எடை கூடியதால் படங்களில் நடிக்க பெரிதாக வாய்ப்பு வரவில்லை. திருமணம் செய்து கொள்ளருப்பதாகவும் தகவல்கள் கூறப்பட்டது. தற்போது கடும் உடற்பயிற்சிகள் மூலம் எடையை குறைத்து இருக்கிறார்கள்.

சில வாரங்களுக்கு முன்பு மீண்டும் தமிழில் இயக்குநர் ஏ.எல்விஜய் இயக்கத்தில் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படத்தில் அனுஷ்கா நடிக்க பேச்சுவார்த்தை நடப்பதாகவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில் அனுஷ்கா நடிக்கவுள்ள அடுத்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தை மகேஷ்பாபு இயக்குகிறார். இந்த படம் அனுஷ்காவுக்கு 48-வது திரைப்படமாகும். இதில் கதாநாயகனாக நடிகர் நவீன் பாலிஷெட்டி நடிக்கவுள்ளார். மிக விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பிக்கவுள்ளது.

Trending

Exit mobile version