News
படுக்கைக்கு வா என பெரிய மனிதர்கள் என்னை அழைத்தனர் – அனு இம்மானுவேல் !
நடிகை அனு இம்மானுவேல் விஷால் நடிப்பில் வெளியான துப்பறிவாளன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். அப்படத்தை தொடர்ந்து நம்ம வீட்டு பிள்ளை படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தார். தற்போது கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் ஜப்பான் படத்தில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தன் சினிமா பயணம் பற்றி பேசிய அனு இம்மானுவேல் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்த கசப்பான அனுபவத்தை தற்போது பகிர்ந்துள்ளார். நான் சினிமாவுக்கு வந்த புதிது அப்போது என்னிடம் சிலர் தவறாக அணுகினார்கள். வாய்ப்பு வேண்டுமா படுக்கைக்கு வா என்று சில பெரிய மனிதர்கள் என்னை அழைத்தனர். சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவர் என்னை படுக்கைக்கு அழைத்தார். நான் இதற்கெல்லாம் பயம் இல்லாமல் என் குடும்பத்தினரின் துணையோடு அவற்றை எதிர்கொண்டேன்.
இது போன்ற பிரச்சனைகளை குடும்பத்துடன் சேர்ந்து எதிர்கொள்வதுதான் நல்லது. குடும்பத்தினர் எப்போதும் நமக்கு உதவியாகத்தான் இருப்பார்கள். பெண்கள் முன்னேறவிடாமல் தடுக்கும் மோசமான நபர்கள் சமூகத்தில் இருக்கத்தான் செய்கிறார். அவர்களை கண்டு நாம் பயம் கொள்ளாமல் துணிச்சலாக முன்னேறி செல்ல வேண்டும் என்று கூறினார்.