Connect with us
 

News

விஜய் நடிக்கும் கடைசி படத்தில் ஜோடியாக அபர்ணா பாலமுரளி !

Published

on

தளபதி விஜய் தற்போது இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தி கோட் படத்தில் நடித்து வருகிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இன்னும் ஓரிரு வாரங்களில் தொழில் நுட்ப பணிகளை தொடங்க உள்ளனர் படக்குழு.

தளபதி விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்து உள்ள நிலையில் வருகிற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இருக்கிறார். அதற்கு முன்னராக ஒரே ஒரு படத்தில் நடித்து விட்டு சினிமாவை விட்டு முழுமையாக ஒதுங்கி விட்டு அரசியலில் இறங்க போகிறார்.

விஜய்யின் கடைசி படத்தை எச்.வினோத் இயக்கவுள்ளார். இது விஜய்க்கு 69வது படம். இந்த பாட்டில் விஜய்க்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகை அப்பர்ணா பாலமுரளியிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது படக்குழு.

அபர்ணா பாலமுரளி இதற்கு முன்னதாக 2020ல் வெளியான சூரரை போற்று படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதற்காக தேசிய விருதும் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.