Connect with us
 

News

தி லெஜண்ட் படத்தின் வெளிநாட்டு உரிமைத்தைக் கைப்பற்றிய பிரபல நிறுவனம் !

Published

on

சரவணா ஸ்டோர் அதிபரான சரவணன் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் The Legend. ஜேடி – ஜெர்ரி இயக்கத்தில் இப்படம் உருவாகியுள்ளது. சரவணனுக்கு ஜோடியாக ஊர்வசி ரெளட்டாலா நடித்துள்ளார்.

சுமார் 100 கோடி பொருட்செலவில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள The Legend திரைப்பட தமிழ் சினிமாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தை பிரபல தயாரிப்பாளருமான பைனான்சியர் அன்புச்செழியனின் நிறுவனமான கோபுரம் பிலிம்ஸ் கைப்பற்றியுள்ள நிலையில் தமிழகம் முழுவதும் 800 திரையரங்குகளில் ஜூலை 28- தேதி வெளியாகிறது.

தமிழ் நாட்டை தவிர்த்து The Legend படத்தின் உலக அளவிலான வெளியீட்டு உரிமையை பிரபல API நிறுவனம் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் படமே சூப்பர் ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக வெளியாகிறது.