News

உறுதியான ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் விக்ரம் கூட்டணி !

Published

on

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதி விஜய் வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் போன்ற மெகா ஹிட் படங்களை கொடுத்தவர். அதை தொடர்ந்து விஜய்யின் 65 படத்தை இயக்கவிருந்தார்.

அதற்கு முன்னர் இவர் இயக்கிய தர்பார் படம் மிகப்பெரிய தோல்வியை தழுவியது அதன் எதிரொலியாக சம்பளத்தை குறைத்து வழங்குவதாக சன்பிக்சர்ஸ் நிறுவனம் கூறியதால் அதனால் ஏற்பட்ட முரண்பாடுகளால் அப்படத்திலிருந்து விழகினார்.

இந்த நிலையில் தன் அடுத்த படத்தை சூப்பர் ஹிட் படமாக கொடுக்க விரும்பி பல முன்னணி கதாநாயகர்களை தேடி தேடி கதை கூறி வந்தார். தற்போது விக்ரமிடம் ஒரு கதை சொல்ல அதற்கு விக்ரமும் சம்மதம் தெரிவித்துள்ளாராம். இப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனமே தயாரிக்கவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Trending

Exit mobile version