Connect with us
 

News

இந்தியில் வேண்டாம் தமிழ் மொழியில் பேச சொல்லுங்க மனைவியிடம் கூறிய ஏ.ஆர்.ரஹ்மான் !

Published

on

இசையமைப்பாளர்களிலே தமிழ் சினிமாவில் பெருமைமிகு ஜ கான் என்றால் ஏ.ஆர்.ரஹ்மான். இந்திய சினிமாவை தாண்டி ஹாலிவுட் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் மட்டும் இவரின் கவணம் உள்ளது. இசைப்புயலின் இசையில் பல தமிழ் திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. வெளிநாடுகளில் லைவ் ஷோ பல நடத்தி வருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்.

இந்த நிலையில் சமீபத்தில் நடந்த விருது வழங்கும் விழா ஒன்றில் மனைவியுடன் கலந்து கொண்டார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போது மேடையில் பேச ஆரம்பித்தார் ஏ.ஆர்.ரஹ்மான் மனைவி சாய்ரா பானு அப்போது இந்தியில் பேசாதீங்க தமிழ் மொழியில் பேசுங்க என கூறினார். அப்போது அந்த அரங்கமே சும்ம அதிரிச்சி.

தொடர்ந்து பேசிய சாய்ரா பானு அனைவரும் என்னை மன்னிக்கவும் என்னால் சரளமாக தமிழ் பேச தெரியாது. எனக்கு இவரின் குரல் மிகவும் பிடிக்கும் அவரின் மீதும் அவர் குரல் மீதும் எனக்கும் காதல் உண்டு என கூறினார்.