Reviews

அரண்மனை – 3 திரைவிமர்சனம் !

Published

on

சு ந்தர்.சி இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு வெளியான அரண்மனை படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியையும் கொடுத்தது. அதனை தொடர்ந்து இரண்டாம் பாகத்தையும் எடுத்து அதிலும் வெற்றி கண்டார் தற்போது ஐந்து வருடங்கள் இடைவெளிக்கு பின்னர் அரண்மை மூன்றாம் பாகத்தை எடுத்துள்ளார் இயக்குநர் சுந்தர்.சி.

Movie Details

மிகப்பெரிய் அரண்மையில் வசிக்கும் ஜமின் சம்பத் இவரின் மகள் ராஷி கன்னா. ராஷி கன்னா சிறு வயதிலிருந்தே இந்த அரண்மைனையில் பேய் இருக்கிறது என்று கூறி வருகிறார். ஆனால் இவர் சொல்வதை நம்ம மறுக்கும் அப்பாவான சம்பத் ராஷி கன்னாவை ஹாஸ்டலில் சேர்த்து படிக்க வைக்கிறார்.

ராஷி கன்னாவின் அத்தை மருமனான சுந்தர்.சி பெரிய பெரிய சாமி சிலைகளை வைத்து அதற்கு பூஜைசெய்து தீய சக்திகளிடமிருந்து மக்களை பாதுகாக்கும் வேலையை செய்து வருகிறார். இப்படத்திலும் முதல் இரண்டு பாகங்களில் வந்த அதே ரவி என்ற பெயருடன் வருகிறான் சுந்தர்.சி. அத்தை மருமகனான சுந்தர் சியிடம் அரண்மனையில் பேய் இருப்பதாக சொல்கிறார் ராஷி கன்னா. இதனை கேட்ட சுந்தர் சி அந்த அரண்மனைக்கு சென்று அங்கு இருக்கும் பேய்கள் யார் எதற்காக இருக்கிறது அதை எப்படி சுந்தர் சி விரட்டினார் அதை விரட்டினாரா இல்லையா என்பதுதான் படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகன் ஆர்யா ஆனால் படத்தில் சில காட்சிகளில் மட்டுமே வருகிறார். பெரிதாக நடிப்புக்கு வாய்ப்பில்லை. சிறப்பு தோற்றம் போல வந்து செல்கிறார் ஆர்யா.

படத்தின் நாயகியான ராஷி கன்னா இவருக்கும் பெரிதாக நடிப்பு காட்சிகள் என்று எதும் இல்லை ஆண்ட்ரியாவுக்கு கொடுத்த அந்த முக்கியதுவதில் கொஞ்சமாவது ராஷி கன்னாவுக்கும் கொடுதிருக்கலாம். அழகியாக மட்டுமே பார்த்த ஆண்ட்ரியாவை கொஞ்சம் கொடூரமாக காட்டியுள்ளார் சுந்தர்.சி. பழி வாங்கும் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

விவேக், யோகி பாபு, மனோபாலா, நளினி, மைனா என நகைச்சுவைக்கு இவர்கள் அங்கு அங்கு நம்மை சிரிக்க வைக்கிறார்கள்.

இதற்கு முன்பாக வெளியான அதே அரண்மனை கதைதான் திரைக்கதையிலும் சரி காட்சியமைப்பிலும் சரி எந்த ஒரு மாற்றமும் செய்யவில்லை எதிலும் புதுமையும் இல்லை. அடுத்த காட்சி இதுதான் என்று நாம் யூகிக்க கூடிய காட்சிகளால் படத்தின் மேல் உள்ள ஈர்ப்பு குறைகிறது.
Cinetimee

யுகே.செந்தில்குமாரின் ஒளிப்பதிவில் அரண்மனையின் அழகு மட்டுமல்ல ஆபத்தும் அழகாக நமக்கு தெரிகிறது. சத்யாவின் பின்னணி இசை சுந்தர்.சியின் பேய் படங்களுக்கு ஏற்ற போல அமைந்திருக்கிறது.

உண்மையாக சொல்ல வேண்டும் என்றால் படத்தில் இவருக்குதான் முக்கியதுவம் என்று சொல்ல முடியாத அளவுக்கு திரைக்கதை இருக்கிறது. ஆனால் முதல் இரண்டு பாகங்களை விட இந்த பாகத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் கண்டிப்பாக இதுவரை வந்த அனைத்து பேய் படங்களில் பார்த்திடாத வியக்க வைக்கும் கிராபிக்ஸ் காட்சிகள் நம்மை வியக்க வைக்கிறது கண்டிப்பாக அதற்காக அவர்களை பாராட்டியே ஆக வேண்டும்.

படத்தில் பல இடங்களில் தேவையற்ற பல காட்சிகள் இருக்கிறது அதையெல்லாம் வெட்டி நீக்கி இருக்கலாம். இரண்டரை மணி நேரம் ஒரு இரண்டு மணி நேரமாக குறைத்து படத்தை கொஞ்சம் விறுவிறுப்பை கொடுத்திருக்கலாம் அதை செய்ய தவறி விட்டார்கள். முதல் இரண்டு பாகமும் கொடுத்த அந்த வெற்றி முத்திரையை இந்த படம் நமக்கு கொடுக்க தவறி விட்டது.


மொத்தத்தில் அரண்மனை எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லாமல் ஜாலியாக ஒரு படம் பார்க்க வேண்டும் என்று நினைக்கும் அனைவரும் திரையரங்கில் சென்று பார்க்கலாம்.

Trending

Exit mobile version