News
அர்ஜூன் தாஸ் – ஜஸ்வர்யா லட்சுமி காதல் விவகாரம் !

மலையாள சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக இருப்பவர் நடிகை ஜஸ்வர்யா லட்சுமி. இவர் நடிப்பில் இறுதியாக தமிழில் வெளியான கட்டா குஸ்தி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.
சமீபத்தில் ஜஸ்வர்யா லட்சுமி நடிகர் அர்ஜூன் தாஸுடன் நெருக்கமாக இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்தார். அதனை கண்ட பலரும் அவருடன் காதலில் உள்ளதாக கருதி தங்களது வாழ்த்துகளை ஜஸ்வர்யா லட்சுமிக்கு தெரிவித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் இதுகுறித்து அதற்கு விளக்கமளிக்கும் விதமாக ஒரு பதிவை வெளியிட்டுள்ளார் அதில் ‘ இந்த புகைப்படம் இவ்வளவு தூரம் பெரிதாகும் என நான் எதிர்பார்க்கவில்லை. நாங்கள் சந்தித்தோம் புகைப்படம் எடுத்தோம். அதனை பதிவிட்டேன் அதில் விவரிப்பதற்கு ஒன்றுமில்லை. நாங்கள் நண்பர்கள் நேற்றிலிருந்து எனக்கு செய்தி அனுப்பிய அனைத்து அர்ஜூன்தாஸ் ரசிகர்களே அவர் எப்போதும் உங்களுக்கானவர் எனத் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் காதம் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.