News
பிரபு ஜெயராம் இயக்கத்தில் நடித்து வரும் அருண் விஜய் !

அருண் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியான திரைப்படம் மிஷன் சேப்டர் 1 இப்படத்தை இயக்குநர் விஜய் இயக்கியிருந்தார். இப்படம் அருண் விஜய்க்கு எதிர் பார்த்த வெற்றியை கொடுத்தது. தற்போது இயக்குநர் பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த நிலையில் என்னங்க சார் உங்க சட்டம் படத்தின் இயக்குநர் பிரபு ஜெயராம் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் அருண் விஜய். எந்த ஒரு அறிவிப்பும் இல்லாமல் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறதாம் மிக விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும்.