News

தக் லைஃப் படத்தில் இணையும் அருண் விஜய்?

Published

on

மணிரத்னம் – கமல்ஹாசன் கூட்டணியில் 1987ல் வெளியான திரைப்படம் நாயகன். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தை தொடர்ந்து சுமார் 35வது ஆண்டுகளுக்கு பின்னர் இந்த கூட்டணி தக் லைஃப் என்ற படத்தின் மூலம் மீண்டும் இணைகிறது.

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் மற்றும் கமலின் ராஜ்கமல் நிறுவனம், மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் ஆகியவை இப்படத்தை இணைந்து தயாரிக்கிறது.

இப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்ட மலையாள நடிகர் துல்கர் சல்மான் கால்ஷீட் பிரச்சனை காரணமாக இப்படத்திலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக சிம்பு நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் ஜெயம் ரவி நடிக்கவிருந்த கதாப்பாத்திரத்தில் அருண் விஜய் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது அருண் விஜய் பாலாவின் வணங்கான் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

 

Trending

Exit mobile version