News
மீண்டும் அஜித்துக்கு வில்லனாகும் அருண் விஜய் !

மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிக்கும் ஏகே 62 படத்தில் வில்லனாக அருண் விஜய் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மகிழ் திருமேனி ஏகே 62 படத்தை இயக்குவது உறுதியான போதிலும் அது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் இன்னும் வெளியிடவில்லை. அறிவிப்பு வெளியாக விட்டாலும் அப்படத்தின் ஆரம்ப கட்ட பணிகளை முழுவீச்சில் நடந்து வருகின்றன.
அந்த வகையில் ஏகே 62 படத்தில் வில்லனாக நடிக்க உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி தமிழ் சினிமாவில் தற்போது ஹீரோவாக கலக்கிக் கொண்டிருக்கும் நடிகர் அருண் விஜய் தான் ஏகே 62 படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இவர் ஏற்கனவே கௌதம் மேனன் இயக்கத்தில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அஜித்துக்கு வில்லனாக நடித்திருந்தார். அதேபோல் இயக்குநர் மகிழ் திருமேனி இயக்கிய தடம், தடையறத் தாக்க போன்ற படங்களிலும் அருண் விஜய் நாயகனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.