Connect with us
 

News

அருண் விஜய்யின் பார்டர் படத்தின் வெளியீடு தள்ளிவைப்பு?

Published

on

நடிகர் அருண் விஜய் நடித்து திரைக்கு வரவிருக்கும் திரைப்படம் பார்டர் இத்திரைப்படம் இம்மாதம் 19-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது கிடைத்த தகவலின்படி இப்படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் அறிவழகன் இயக்கியுள்ள இப்படத்தில் அருண் விஜய், ரெஜினா, பகவதி பெருமாள் என பலர் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சாம் சிஎஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த மாதம் 19-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு படத்திற்காக புரமோஷன் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் வெளியீட்டு தேதி அடுத்த மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. ஆனாலும் இது குறித்த அதிகாரபூர்வ தகவல் மிக விரைவில் வெளியாகும் என கூறப்படுகிறது.