News
இயக்குநர் விஜய்யுடன் அருண் விஜய் இணையும் புதிய திரைப்படம் !

நடிகர் அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் நேற்று மாலை வெளியானது. இயக்குநர் ஏ.எல்.விஜய் இயக்கும் இப்படத்திற்கு அச்சம் என்பது இல்லையே என பெயரிடப்பட்டுள்ளது.
அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகவுள்ள இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்கிறார். இவருடன் நிமிஷா சஜயனும் நடிக்கிறார். இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தின் அதிகாரபூர்வு அறிவிப்பு நேற்று வீடியோவாக படக்குழு வெளியிட்டது. இதன் அறிவிப்பு பட காட்சிகள் முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீஶ்ரீ சாய் மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு லண்டனில் தொடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.