News

ஆர்யாவின் 33-வது திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பம் !

Published

on

நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து வழங்கும், இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில்  ஆர்யா நடிப்பில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படம் ஆர்யா 33 என்று அழைக்க படுகிறது.

தமிழ் சினிமாவின் பெரும் பிரபலங்களான, இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதில் என்றும் வீற்று இருக்கும் ஆர்யா கூட்டணியில் உருவான மேஜிக் தான் “டெடி” திரைப்படம்.  

இத்திரைப்படம் தமிழ் ஓடிடி வரலாற்றில் பெரும் சாதனை புரிந்துள்ளது. OTT தளங்களில் வெளியிடப்பட்ட ஒரிஜினல்களில் பெரும்பாலானவை தமிழ் பேசும் நகர்ப்புற மக்கள் மற்றும் வெளிநாடடு மக்கள் மட்டுமே காணும் வகையில் இருந்தபோது, ‘டெடி’ தடைகளை உடைத்து புறநகர் மற்றும் கிராமப் பகுதிகளுக்குள் நுழைந்தது. இந்த திரைப்படத்தின் புதிய கதையமைப்பு மற்றும் பொழுதுபோக்கு அம்சங்கள், பலதரபட்ட மக்களும் விரும்பும்படி அமைந்துள்ளது.

திரை வரலாற்றில் மிகபெரிய மைல்கல்லை உருவாக்கிய ஆர்யா-சக்தி சௌந்தர்ராஜன் கூட்டணி,  மீண்டும் ரசிகர்களை கட்டி போட ஒரு புதிய திரைப்படத்துடன் வருகை புரிந்துள்ளது. ஆர்யா 33 என தற்காலிகமாக பெயரிடபட்டுள்ள இந்த திரைப்படம் நிச்சயம் திரையரங்கு வெளியீடாக வெளிவரவுள்ளது.  ஆம்! இந்த கூட்டணி இரண்டாவது முறையாக இணைகிறது.

இதனை நடிகர் ஆர்யாவின் The Show People மற்றும் Think Studios நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.  இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜனுடைய முந்தைய திரைப்படங்களான ‘நாய்கள் ஜாக்கிரதை, மிருதன், டிக் டிக் டிக் மற்றும் டெடி’ போன்று மொத்தமாக நாம் இதுவரை பார்த்திராத புதுவகை ஜானர் படங்கள் தருவதில் வல்லவர். இந்த படத்திலும் மற்றுமொரு புதிய முயற்சியை கையாண்டு இருக்கிறார்.

டெடி படத்திற்கு பின்னர் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் மற்றும் ஆர்யா இணையும் புதிய படம்.படத்தின் படபிடிப்பு மிக எளிமையான  பூஜையுடன் இன்று (அக்டோபர் 25, 2021) இனிதே துவங்கியது.இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.

Trending

Exit mobile version