News

ராணுவ அதிகாரியாக ஆர்யா நடிக்கும் கேப்டன்

Published

on

ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை திரைப்படம் கடந்த ஜூலை மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் பெற்றது. இப்படத்தில் ஆர்யா குத்துச்சண்டை வீரராக நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து அரண்மனை 3 படமும் எனிமி படமும் வெளியானது.

எனிமி திரைப்படத்தில் ஆர்யா வில்லனாக நடித்திருந்தார். இப்படத்தை தொடர்ந்து இயக்குநர் சக்தி சவுந்தராஜன் இயக்கும் படதில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கேப்டன் என்று பெயர் வைத்துள்ளனர். ஆர்யா மற்றும் சக்தி சவுந்தராஜன் கூட்டணியில் ஏற்கனவே வெளியான டெடி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர் ஆனால் இருவரும் புதிய படத்தில் இணைந்துள்ளனர்.

கேப்டன் திரைப்படம் டெடி திரைப்படம் இல்லை என்றும் இது ராணுவம் சம்பந்தமான கதை என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. ஆர்யா கிழக்கு கடற்கரை சாலையில் நண்பர்களுடன் அடிக்கடி சைக்கிள் சவாரி செல்வது வழக்கம். அப்படி அவருடன் சைக்கிள் செல்லும் நண்பர்கள் ஆர்யாவை கேப்டன் என்று அழைப்பார்கள். இந்த படத்திற்கு இந்த தலைப்பு மிக பொருத்தமாக இருந்ததால் அந்த பெயரையே வைத்தோம் என்கிறது படக்குழு. இதில் சிம்ரன், ஐஸ்வர்யா லட்சுமி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

Trending

Exit mobile version