Connect with us
 

News

நவரசா ஆந்தாலஜி படத்தில் துணிந்த பின் பகுதியில் நடித்தது வித்தியாசமான அனுபவம் – நடிகர் அதர்வா முரளி !

Published

on

தென்னிந்திய சினிமாவில், முன்னணி நடசத்திரமாக வலம் வரும் இளம் நடிகர் அதர்வா முரளி.  விரைவில் வெளியாகவுள்ள “நவரசா” ஆந்தாலஜி திரைப்படத்தில் தைரியம் பற்றிய பகுதியில், இயக்குநர் சர்ஜுன் KM இயக்கியுள்ள “துணிந்த பின்”  கதையில் அனுபவமில்லாமல் தடுமாறும் காவல் அதிகாரி ‘வெற்றி’ பாத்திரத்தில் அதர்வா நடித்துள்ளார்.  தமிழின் முன்னணி கலைஞர்கள் இணைந்து உருவாக்கியுள்ள  “நவரசா” ஆந்தாலஜி திரைப்படம், Netflix தளத்தில் வரும் 2021 ஆகஸ்ட் 6 அன்று உலகளவில் வெளியாகிறது.

இயக்குநர் சர்ஜூன் KM உடன் இணைந்து பணிபுரிந்த அனுபவம் மற்றும் வெற்றி என்ற கதாபாத்திரத்தில் நடித்தது பற்றி,  நடிகர்  அதர்வா முரளி கூறியதாவது :-
இயக்குநர் சர்ஜுன் இந்த படத்தின் திரைக்கதையை  பற்றி விவரிக்கும் போது, எந்த உணர்வை பற்றிய கதையை  சொல்லப்போகிறார், என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தேன்.  இந்தப் படம் தைரியத்தை அடிப்படையாக கொண்டு உருவாக உள்ளது என்று அவர் விவரித்த பின்னர், என் மனம் சந்தோஷத்தின் உச்சிக்கு சென்றது.  நான் ஸ்பெஷல் டாஸ்க் போர்சில் உள்ள ஒரு சிறப்பு அதிகாரியாக (Special Task Force officer) நடிக்கவுள்ளேன், என்று கூறியபோது  ஆடம்பர காவல் அதிகாரி உடையில், மிக ஸ்டைலாக என்னை நானே கற்பனை செய்து கொண்டேன். இந்தப்படம்  எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. இயக்குநர்  சர்ஜுன் உடன் பணி புரிந்தது  மற்றும்  வெற்றி என்ற கதாபாத்திரத்தை செய்தது மிகவும் அற்புதமான  அனுபவமாக இருந்தது.

“நவரசா” மனித  உணர்வுளில்   9 ரசங்களான,  கோபம், கருணை, தைரியம், அருவருப்பு, பயம், நகைச்சுவை, காதல், அமைதி மற்றும் ஆச்சர்யம் ஆகிய உணர்வுகளை கொண்டு,  ஒன்பது வெவ்வேறு அழகான கதைகளை கூறும்  ஆந்தாலஜி திரைப்படமாகும். தமிழின் 40 க்கும் மேற்பட்ட முன்னணி நட்சத்திரங்கள் மற்றும் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள், ஆளுமைமிக்க இயக்குநர்கள் பங்களிப்பில், இந்தியாவின் மிக முக்கிய படைப்பாக, “நவரசா” உருவாகியுள்ளது. Justickets  நிறுவனத்தின் சார்பில் மணிரத்னம் மற்றும் ஜெயேந்திரா பஞ்சாபகேசன் இணைந்து இப்படத்தினை  தயாரித்துள்ளனர்.