News
அட்லீ – ஷாருக்கான் திரைப்படம் கைவிடப்படுகிறதா?

வெற்றி பட இயக்குநர் அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் – நயன்தாரா நடிப்பில் உருவாகி வரும் பாலிவுட் திரைப்படம் ‘லயன்’.
இப்படத்திற்காக ஷாருக்கான் கொடுத்த கால்ஷீட் நல்ல படியாக போன சமயத்தில் போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கானின் மகன் சிறைக்கு போனதால் கொடுத்த கால்ஷீட் அனைத்துமே மகனை வெளியில் எடுப்பதிலேயெ போனது.
இந்த நிலையில் ஷாருக்கான் தனது அடுத்த படத்திற்கான பணிகளை தொடங்கிவிட்டதாகவும் அடிலீயின் லயன் படத்தை கண்டுகொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
அட்லீ – ஷாருக்கான் திரைப்படம் கிட்டத்தட்ட டிராப் என்று கூறுப்படுகிறது. இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாகி அங்கு ஒரு மார்கெட்டை பிடிக்கலாம் என்று நயன்தாராவுக்கும் அவர் ரசிகர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை கொடுக்கும் என்றும் கூறப்படுகிறது.